உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் தி.மு.க., முகவர்கள் கூட்டம்

நெய்வேலியில் தி.மு.க., முகவர்கள் கூட்டம்

நெய்வேலி; நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பார்வையாளர் அறிமுகம் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.நெய்வேலி ஆர்ச் கேட் அருகே திருமண மண்படத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் வரவேற்றார். கூட்டத்தில், வர உள்ள சட்டசபை தேர்தலில் நெய்வேலி தொகுதியில் ஓட்டுச்சாவடி முகவர்கள் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.நெய்வேலி சட்டசபை தொகுதி பார்வையாளர் இளையராஜா, விருத்தாசலம் தொகுதி பார்வையாளர் சுபா சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் குருநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் புகழேந்தி, பாரி, அறிவழகன், என்.எல்.சி.,- தொ.மு.ச., தலைவர் திருமாவளவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !