உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தி.மு.க., நகர பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் பழனிமனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மதியழகன், திருமூர்த்தி, ராயர், பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன், சுந்தரபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன், கலைவாணன், கருணாநிதி முன்னிலை வகித்தனர். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவது,19ம் தேதி நடைபெறும் இளைஞரணி பொதுக் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, பூத் கமிட்டி நிர்வாகிகளின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டன. கூட்டத்தில், நகர துணை செயலாளர் சுதாகர், மாவட்ட விளையாட்டு அணி நிர்வாகி செந்தில், நகர இளைஞரணி தலைவர் சதீஷ், தகவல் தொழில் நுட்ப பிரிவு தினேஷ், துரைமணிராஜன், ஒன்றிய பொருளாளர் முத்துராமன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை