மங்கலம்பேட்டையில் தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்
விருத்தாசலம்; மங்கலம்பேட்டையில், தி.மு.க., தெற்கு ஒன்றியம் சார்பில், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தொகுதி மேற்பார்வையாளர் சுபா சந்திரசேகர் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், பேரூராட்சி நகர கழக செயலாளர் செல்வம் மற்றும் கிளைக் கழக செயலாளர் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.