மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
18-Mar-2025
பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசினார்.பண்ருட்டி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், மத்திய பா.ஜ., அரசின் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் உள்ளிட்டவற்றை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் இந்திரா காந்தி சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், புஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துரைராஜ், சதாம் வரவேற்றனர்.கூட்டத்தில் அமைச்சர் கணேசன், மாநில இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், மாநில மகளிரணி யாழினி, பேச்சாளர் முல்லைவேந்தன் சிறப்புரையாற்றினர். சம்பத் நன்றி கூறினார்.
18-Mar-2025