உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., தாராளம் நிர்வாகிகள் குஷி

தி.மு.க., தாராளம் நிர்வாகிகள் குஷி

தமிழக சட்டசபை தேர்தலுக்கு 16 மாதங்கள் உள்ள நிலையில், எப்போதும் இல்லாத அளவில், தி.மு.க., வினர் தேர்தல் பணியை துவக்கிவிட்டனர். கட்சி தலைவர் ஸ்டாலின், இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஆகியோர், வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.இருவரும் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தொண்டர்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பூத் கமிட்டி கூட்டத்தை நடத்தி முடித்து விட்டனர். தொண்டர்களை உற்சாகபடுத்தும் வகையில் தீபாவளிக்கு முதல் கட்டமாக 'ப' வைட்டமின் வழங்கினர். அடுத்து, வாக்காளர் சேர்த்தல் முகாம், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி, கடலுாரில் நடந்த துணை முதல்வர் விழா, பூத் கமிட்டியினர், வாக்காளர்களை வீடுவீடாக சந்தித்து அரசின் சாதனைகளை கூறி, தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுதல் ஆகியவற்றிக்கும் கட்சி நிர்வாகிகள், கட்சி மேலிடம் மூலம் கவனிக்கப்பட்டனர். இந்நிலையில், பொங்கலுக்கும் கட்சியின் கவனிப்பு கனிசமாக இருந்ததாக கூறப்படுகிறது..எப்போதும் இல்லாத வகையில் தி.மு.க., வினரின் தாராளம், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டளை குஷி படுத்தியுள்ளது. குறிப்பாக நெல்லிக்குப்பம் பகுதி நிர்வாகிகள் குஷியோ குஷியாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ