உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் மீது வேன் மோதி விபத்து; கிராம உதவியாளர்கள் படுகாயம; தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஆறுதல்

பஸ் மீது வேன் மோதி விபத்து; கிராம உதவியாளர்கள் படுகாயம; தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஆறுதல்

சிதம்பரம் : தனியார் பஸ் மீது வேன் மோதியவிபத்தில் படுகாயமடைந்த கிராம உதவியாளர்களை தி.மு.க.,மாட்ட பொருளாளர் சந்தித்து ஆறுதல் கூறினார். கடலுாரில் வருவாய்துறை உள்ள சங்கங்கள் சார்பில் ஊர்வலம் ,தர்ணா போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றக சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த கிராம உதவியாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் வேன் மூலம் கடலுாருக்கு புறப்பட்டனர். வேன் வண்டி கேட் பஸ் நிறுத்தத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக முன்னே நின்றிருந்த தனியார் பஸ்சின் பினால் மோதியது.இதில் வேனில் பயணம் செய்த, சுமதி, 47: கபிலன், 48: தினேஷ், 38: ஆனந்தி 45: காமாட்சி,36; உள்ளிட்ட 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடன் அவர்களை அருகில் இருந்தவர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த கடலுார் மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் நேரில் சென்று , காயமடைந்தவர்களை சந்தித்து பிரட், பழம் கொடுத்து ஆறுதல் கூறினார். அண்ணாமலைநகர் பேரூராட்சித் தலைவர் பழனி ,ஒன்றிய செயலாளர் சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி