மேலும் செய்திகள்
செஞ்சியில் நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்
07-Sep-2025
சிறுபாக்கம் : நெய்வேலியில் நடக்கும் தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (10ம் தேதி) மாலை 4:00 மணிக்கு நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில், வரும் செப்., 17ம் தேதி நடக்கும் முப்பெரும் விழா மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள் அனைத்து மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
07-Sep-2025