தி.மு.க., நிர்வாகிகள் இனிப்பு வழங்கல்
சிறுபாக்கம்: துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதை வரவேற்று, மங்களூர் ஒன்றிய தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.தமிழக துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதை வரவேற்று, சிறுபாக்கம் அடுத்த அடரி பஸ் நிறுத்தத்தில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மங்களூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். தி.மு.க., மாவட்ட பிரதிநிதிகள் ராமதாஸ், வெங்கடேசன், கிளை செயலாளர்கள் சிவக்குமார், சுப்ரமணியன், நிர்மல்குமார், பிரேம்குமார், கருணாநிதி, சிலம்பரசன் உடனிருந்தனர்.