மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுகம்
14-Apr-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தில், வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் அருள்குமார், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாலபாரதி, வீரபாண்டியன், வாஞ்சிநாதன், தகவல் தொழில் நுட்ப அணி சவுந்தரராஜன், சத்யராஜ், ஜெகன், கிளை செயலர்கள் அன்பழகன், கார்த்திகேயன், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-Apr-2025