உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தே.மு.தி.க., பிரேமலதா சொத்து மதிப்பு நான்கு மடங்கு உயர்வு 

 தே.மு.தி.க., பிரேமலதா சொத்து மதிப்பு நான்கு மடங்கு உயர்வு 

விருத்தாசலம்: தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்ந்துள்ளது. விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவர் கடைசி நாளான கடந்த 7ம் தேதி மனுதாக்கல் செய்தார். அப்போது, அவர் தனது சொத்து விபரங்கள் குறித்து பிரமாண பத்திரத்தில் பின்வரும் விபரங்களை தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.2.19 கோடி மதிப்புள்ள லேண்ட் குரூஸர் கார் உள்ளிட்ட ரூ.31.18 கோடி அசையும் சொத்துக்கள், ரூ.141.13 கோடி மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.57.81 கோடி கடன் மற்றும் ரூ.3.66 கோடி பிரச்னைக்குரிய கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் 2,332 கிராம் தங்கம், 1,540 கிராம் வெள்ளி, கையில் ரூ.2.75 லட்சம் ரொக்கம், வங்கி கணக்குகளில் 2.53 கோடி ரொக்கம் இருப்பதாக பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், விருத்தாசலம் தொகுதியில் அவர் போட்டியிடுகையில், ரூ.5.98 கோடி அசையும் சொத்து, 32.6 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், அப்போது, தனக்கு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் கடன் ஏதும் இல்லை எனவும், பிரச்னைக்குரிய கடன் ரூ.8.15 கோடி இருந்ததாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்களில் அவரது சொத்து மதிப்பு 4 மடங்கு உயர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி