உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தி.மு.க., நிவாரண உதவி

 தி.மு.க., நிவாரண உதவி

பரங்கிப்பேட்டை: கன மழையால் வீடு இடிந்து விழுந்து பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு, தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் நிவாரண உதவிகள் வழங்கினார். பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ந்தது. இந்த மழையால் பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவருடைய வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார். அவருடன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை