தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்
சிதம்பரம் : கடலுார் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், காட்டுமன்னார்கோவிலில் நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார். ஐயப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., துரை சரவணன், மாவட்ட பொருளாளர் கதிரவன், துணைச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசின் நான்காண்டு சாதனை குறித்து விளக்கிட தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, சிவக்குமார், தங்க ஆனந்தன், ஜெயபாண்டியன், நாராயணசாமி, காசிராஜன், சுப்ரமணியன், தனஞ்செயன், விஜயசுந்தரம், மதியழகன், ஏ.மதியழகன், வெற்றிவேலு, சபாநாயகம், பாலு, கலையரசன், சங்கர், ராஜேந்திரகுமார், நடராஜன், சோழன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், மகேஷ், வெற்றிவேல். கடலுார் பகுதி செயலாளர்கள், நடராஜன், வெங்க டேஷ், பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன், பேரூராட்சி சேர்மன்கள் கணேசமூர்த்தி, பழனி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், முத்துகுமார் , குட்டிமணி, ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர்.