மேலும் செய்திகள்
வாய் புற்றுநோயாளிகள் அதிகம்
01-Jun-2025
கடலுார்:புகை பழக்கத்தை கைவிட வேண்டுமென, திட்டக்குடி அருண் மருத்துவமனை டாக்டர் கொளஞ்சிநாதன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதியை உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறது. புகையிலை பல வழிகளில் உட்கொள்ளப்படுகிறது. அவற்றுள் சிகரெட் புகைத்தல், புகையிலை மெல்லுதல் அதிகமாக காணப்படுபவை. புகையிலை பழக்கத்தினால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இறக்கின்றனர். வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு போன்றவை ஏற்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதற்கு அரசின் நடவடிக்கைகளே காரணம். அரசு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், சுய கட்டுப்பாடு ஒவ்வொரு மனிதனையும் புகை பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கும்.
01-Jun-2025