உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர்த்தொட்டி சேதம்: தொழிலாளிக்கு வலை

குடிநீர்த்தொட்டி சேதம்: தொழிலாளிக்கு வலை

புவனகிரி: குடிநீர்த்தொட்டி மற்றும் மின் இணைப்பை சேதப்படுத்தியவரை போலீசார் தேடிவருகின்றனர். மருதுார் அருகே ஆலம்பாடி மெயின் ரோட்டுத் தெருவில் கிராம ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்புடன், மினி டேங்க் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மினிடேங்க் மற்றும் மின் இணைப்பை, அதேப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான செல்வம்,35; சேதப்படுத்தினார். புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்கு பதிந்து, செல்வத்தை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்