உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கூழாங்கற்கள் கடத்தல் டிரைவர் கைது; லாரி பறிமுதல்

 கூழாங்கற்கள் கடத்தல் டிரைவர் கைது; லாரி பறிமுதல்

பெண்ணாடம்:கூழாங்கற்கள் கடத்திச்சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, காலை 7:30 மணியளவில் அருகேரி - நந்திமங்கலம் சாலை வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசு அனுமதியின்றி 3 யூனிட் கூழாங்கற்கள் விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் விருத்தாசலம் அடுத்த புதுப்பேட்டை சந்தோஷ், 36, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை