உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்சோவில் டிரைவர் கைது

போக்சோவில் டிரைவர் கைது

நெய்வேலி அக்.30-: நெய்வேலி அடுத்துள்ள ஊமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் முரளிதரன், 25; வேன் ஓட்டுனர். இவருக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் முருகானந்தம் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் பாலியல் நீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, நேற்று தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதன் பேரில் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாதம் கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவழகி விசாரணை நடத்தி, முரளிதரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை