உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  டிரைவர் தற்கொலை

 டிரைவர் தற்கொலை

கிள்ளை: குடும்ப பிரச்னை காரணமாக, டிரைவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிள்ளை அடுத்த பொன்னந்திட்டு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா, 37; இவரது, மனைவி சுமித்திரா, 24;இருவருக்கும் திருமணமாகி, 5 ஆண்டுகள் ஆகிறது. ராஜா, வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அங்கிருந்து கடந்த அக்டோபரில், பொன்னந்திட்டிற்கு வந்தார்.இந்நிலையில், கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக சுமித்திரா, கடந்த வாரம்கோபித்துக்கொண்டு பரங்கிப்பேட்டை அகரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்தவர் நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்