மேலும் செய்திகள்
புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
10-Sep-2025
கடலுார்: கடலுார் மாதர் நல தொண்டு நிறுவனம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப் புணர்வு பேரணி நடந்தது. பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாதர் நல தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ராஜேந்திரன், திட்ட பொறுப்பாளர் ஹேமலதா, ஆலோசகர் யோகேஸ்வரன், முன்மாதிரி கல்வியாளர் அபிமன்யு ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
10-Sep-2025