டாஸ்மாக் கடை சேதம் போதை ஆசாமி கைது
நெய்வேலி,: டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி டவுன்ஷிப் 7 வது வட்டத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நெய்வேலி அடுத்த செடுத்தான்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த முருகவேல் மகன் ராஜேஷ்.26 என்பவர் டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது ரூ. 10 குறைவாக கொடுத்து விற்பனையாளர் சக்திவேலிடம் மதுபாட்டில் கேட்டுள்ளார். இதற்கு சக்திவேல் மது பாட்டில் கொடுக்காமல் ராஜேைஷ திட்டி அனுப்பி விட்டார். இந்நிலையில் டாஸ்மாக் கடை இரவு கடை மூடப்பட்டவுடன் நள்ளிரவில் அந்த கடையின் மேற்கூரையை உடைத்து ராஜேஷ் உள்ளே இறங்கி மதுபாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். சேதப்படுத்தப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.15 ஆயிரத்தி 700 ஆகும். இதுகுறித்து கடை விற்பணையாளர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், நள்ளிரவில் கடையை உடைத்து சேதப்படுத்தியது ராஜேஷ் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராஜேஷை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.