மகாலட்சுமி கல்லுாரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
கடலுார்: கடலுார், பூண்டியாங்குப்பம் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் 'போதை இல்லா தமிழகம்' குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று 'போதை இல்லா தமிழகம்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் ரவி, கல்லுாரி தாளாளர் தேவகி, கல்லுாரி துணைத் தலைவர் ராக்கவ் தினேஷ், கல்லுாரி முதல்வர் இளவரசன், மாணவ, மாணவிகள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கல்லுாரி மேலாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷ்லி, துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.