உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதை தடுப்பு விழிப்புணர்வு

போதை தடுப்பு விழிப்புணர்வு

கடலுார்: கடலுார் பாதிரிக்குப்பம் மாதர் நலத்தொண்டு நிறுவனம், புதிய பாதை மதுபோதை மறுவாழ்வு மையம் மற்றும் மாவட்ட சமூக குழந்தை பாதுகாப்புநிறுவனம் சார்பில் மது போதையால் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கடலுார் கூத்தப்பாக்கத்தில் உள்ள புனிதவளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக குழந்தை பாதுகாப்பு ஊழியர்முகுந்தன், எம்.என்.டி.என்., நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பங்கேற்று மது, புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதைபழக்கத்தை கைவிட வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் எம்.என்.டி.என்.,பணியாளர்கள் பங்கேற்று மதுவினால்ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் பொருளாதார, சமூக பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை