உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

திட்டக்குடி: திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம், தற்போது மாணவர்கள், இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுபற்றி, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., பார்த்திபன் பங்கேற்று, போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை