உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதையில் பணி:  ஏட்டு இடமாற்றம்

போதையில் பணி:  ஏட்டு இடமாற்றம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் போதையில் பணிபுரிந்த ஏட்டு, ஆயுதப்படைக்கு மாறுதல் செய்யப்பட்டார். விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தவர் ரத்தினவேல். மதுபழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி போதையில் பணிக்கு வருவது வழக்கம். உயர் அதிகாரிகள் எச்சரித்தும், மதுஅருந்துவதை கைவிடாமல் இருந்து வந்தார். கடந்த வாரம் போதையில் ரத்தினவேலு பணிக்கு வந்தது குறித்து எஸ்.பி.,க்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ஏட்டு ரத்தினவேலு மதுஅருந்தி பணியில் ஈடுபட்டது உறுதியானதால், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ