உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிபோதையில் நடந்து சென்றவர் பலி

குடிபோதையில் நடந்து சென்றவர் பலி

ஸ்ரீமுஷ்ணம்: குடிபோதையில் சாலையில் நடந்து சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். ஸ்ரீமுஷ்ணம், திருப்பானாழ்வார் தெருவை சேர்ந்தவர் மாயவேல், 45; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, நாச்சியார்பேட்டைக்கு சென்று குடித்துவிட்டு சாலையோரம் நடந்து வந்தார். அப்போது நடுத்தெரு அருகே உள்ள மைல்கல் பக்கத்தில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் மாயவேலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் சிகிச்சை பலனின்றி மாயவேல் உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ