உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் புழுதி வியாபாரிகள் பாதிப்பு

சாலையில் புழுதி வியாபாரிகள் பாதிப்பு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடை வீதி பகுதிகளில் புழுதி பறப்பதால் வியாபாரிகள் கடும் அவதியடைகின்றனர். மந்தாரக்குப்பம் கடை வீதி வழியாக தினசரி 100 க்கும் மேற்பட்ட லாரிகள் நிலக்கரி, சாம்பல் ஏற்றிச் செல்கின்றன. இவ்வழியாக லாரிகள் அதிவேகமாக செல்வதால் சாலைகளில் இருசக்கர வாகன ஒட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. லாரிகள் வேகமாக செல்லும் போது சாம்பல் மற்றும் கரி துகள்கள் பறந்து கடைகளுக்குள் செல்வதால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், அனைத்து பொருட்களும் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ