உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிழக்கு மாவட்ட பா.ம.க., ஆலோசனை கூட்டம்

கிழக்கு மாவட்ட பா.ம.க., ஆலோசனை கூட்டம்

கடலுார்: கடலுாரில் கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், நடந்தது.கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், மாநில மாணவரணி செயலாளர் விஜயவர்மன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாணவரணி செயலாளர் மணி, பசுமைத்தாயகம் அமைப்பாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சகாதேவன், ராஜவேல், பிரபாகரன், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கிழக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது. கோர்ட் உத்தரவின்படி பாரபட்சமின்றி அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ