மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
10-Jan-2026
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு கிளை நுாலகத்தில், மனிதன் அறக்கட்டளை சார்பில், போட்டி தேர்வர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது . நுாலகர் ரகுநந்தன், வாசகர் வட்ட தலைவர் மாணிக்க சிகாமணி, பொருளாளர் ரத்தின புகழேந்தி, மணிகண்டன் முன்னிலை வகித்தனர். ராஜா வரவேற்றார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மனிதன் அறக்கட்டளை நிறுவன தலைவர் செல்வமணி, போட்டி தேர்வர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். மூன்றாம் நிலை நுாலகர் பவித்ரா உட்பட பலர் பங்கேற்ற னர். அருள்மணி நன்றி கூறினார்.
10-Jan-2026