மீன் பிடித்த முதியவர் ஆற்றில் மூழ்கி பலி
விருத்தாசலம் : மணிமுக்தாற்றில் மீன்பிடித்த முதியவர், ஆற்றில் மூழ்கி இறந்தார்.விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் மாதவன், 48. நேற்று மாலை 3:00 மணியளவில், பாலக்கரை மணிமுக்தாற்றில் வலைபோட்டு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக தேங்கியிருந்த நீரில் இறங்கியபோது, மூச்சுத்திணறி மூழ்கினார்.தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சென்று, பொதுமக்கள் உதவியுடன் மீட்டபோது, இறந்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.