ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர்: தேடும் பணி தீவிரம்
புதுச்சத்திரம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். பு துச்சத்திரம் அடுத்த பெத்தான் குப்பத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் மணிவேல், 60; இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து பராமரிப்பு வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாலை பெத்தான்குப்பம் - திருச்சோபுரம் இடையே உள்ள பரவ னாற்றின் கரையோரம், மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மாடு தண்ணீரில் இறங்கியுள்ளது. மாட்டை கரைக்கு ஓட்ட ஆற்றில் இறங்கியவர், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுபற்றி தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மணிவேலை தேடி வருகின்றனர்.