மேலும் செய்திகள்
மூதாட்டி மண்டையை உடைத்த வாலிபர் கைது
19-Nov-2026
சேத்தியாத்தோப்பு: மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த மாமங்கலம் கொண்டாபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், கடந்த 19ம் தேதி வயலில் மோட்டார் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த மகன்கள் தர்மதுரை, பாண்டிதுரை, ராஜதுரை ஆகியோர் இது எங்களுக்கு சொந்தமான நிலம் என கூறி, சந்தோஷ்குமாரை தாக்கினர். தடுக்க முயன்ற சந்தோஷ்குமார் தாய் லட்சுமியை இரும்பு பைப்பால் தாக்கினர். அதில் மண்டை உடைந்த லட்சுமி,60; மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜதுரையை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த தர்மதுரை, பாண்டிதுரை ஆகியோரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
19-Nov-2026