உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி மூதாட்டி பலி

பைக் மோதி மூதாட்டி பலி

பண்ருட்டி : பண்ருட்டி அருகே நடந்து சென்ற முதாட்டி பைக் மோதி இறந்தார்.பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ் மனைவி அம்பிகா,67; இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள நிலத்தில் களையெடுக்க சென்றார். பின் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகில் வந்தபோது, எதிரில் வந்த பைக் திடீரென அம்பிகா மீது மோதியது.இதில், பலத்த காயமடைந்த அவர் மேல்சிகிச்சைக்கு கடலுார் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !