குட்டையில் விழுந்த மூதாட்டி பலி
ராமநத்தம்; ஆவட்டி அடுத்த ஆலம்பாடி கிராமத்தை் சேர்ந்தவர் கருப்பன் மனைவி செல்லம்மாள், 85. நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்த நிலையில், இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்நிலையில், நேற்று காலை அவர், வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தார். ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.