வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது. பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்மத்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சலங்குக்கார தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உட்பட 10 இடங்களில் இன்று (நவ.,21) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்த சிறப்பு முகாம் நடந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களுடைய பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய மனுக்களை கொடுத்தனர்.