மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி 2 பேர் பலி சிதம்பரம் அருகே சோகம்
10-Jun-2025
சிதம்பரம் : சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மின் மோட்டார் வழங்கப்பட்டது.சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோட்டார் பழுது ஏற்பட்டதால், மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனையடுத்து, பள்ளி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் சார்பில் 3ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளிக்கு மின் மோட்டாரை, பேராசிரியர் ஞானகுமார், தலைமை ஆசிரியை கண்ணகியிடம் வழங்கினார்.அதனை தொடர்ந்து கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியின் கண் அறுவை சிகிச்சை அரங்கிற்கு குளிர்சாதன பெட்டியை மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷிடம் வழங்கினார். கார்த்திக் ராஜா உடனிருந்தார்.
10-Jun-2025