மின் மோட்டார் திருடியவர் கைது
பரங்கிப்பேட்டை: மின் மோட்டாரை திருடிய வாலிபரைபோலீசார் கைது செய்தனர். புவனகிரி ராகவேந்திரா நகரில், பேரூராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணற்றில் இருந்த மின் மோட்டார் கடந்த 18 ம் தேதி திருடு போனது. பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, கொடுத்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், மின் மோட்டரை திருடிய ராகவேந்திரா நகரை சேர்ந்த அமிர்தகணேசன், 36; என்பவரை கைது செய்து, மோட்டரை பறிமுதல் செய்தனர்.