உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் மோதி மின் ஊழியர் பலி

கார் மோதி மின் ஊழியர் பலி

பண்ருட்டி: பைக்கில் சென்ற மின் ஊழியர், கார் மோதி இறந்தார். பண்ருட்டி அடுத்த கொஞ்சிக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர், 54; நெய் வேலி, வடக்குத்து தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்தார். இவர், நேற்று காலை 9:30 மணிக்கு வி.கே.டி., சாலை வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந் தார். கீழக்கொல்லை அருகில் வந்த போது, பின்னால் வந்த கார், மொபட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பன்னீர் சம் பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை