மேலும் செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
12-Mar-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மின் வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.நெல்லிக்குப்பம் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் 50 க்கும் மேற்பட்டோர் பெயர் மாற்றம், வழித்தடம் மாற்றம், புதிய மின் இணைப்பு போன்றவற்றுக்கு புகார் அளித்தனர். இதில் பலருக்கு உடனடியாக பெயர் மாற்றம் மற்றும் புதிய இணைப்பு வழங்குவதற்கான சான்றுகளை மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் வழங்கினார்.செயற்பொறியாளர் சசிக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் பழனிவேலு, சீனுவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
12-Mar-2025