மேலும் செய்திகள்
கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் வீரர்கள் தேர்வு
20-May-2025
கடலுார் : தமிழ்நாடு மின் பகிர்மானம் கழக விழுப்புரம் மண்டல அளவிலான ஆடவர் விளையாட்டுப்போட்டிகள் ஜூன்.16ம் தேதி முதல் ஜூன்.18ம் தேதி வரை நடந்தது.பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதிநாளான நேற்று தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.விழுப்புரம் தலைமை பொறியாளர் மணிமேகலை தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். கடலுார் மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார்.கடலுார் செயற்பொறியாளர் வள்ளி, கடலுார் செயற்பொறியாளர் (பொது) பாலாஜி சிறப்புரையாற்றினார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் வேல்முருகன், கடலுார் நிர்வாக அலுவலர் ஈஸ்வரன், பங்கேற்று பேசினர். விழாவில் விளையாட்டு பொறுப்பாளர்கள் கடலுார் கண்ணன், திருவண்ணாமலை மணிமலர், விழுப்புரம் கோபு ஆகியோர் பங்கேற்றனர். விழுப்புரம் மண்டல அளவில் அனைத்து விளையாட்டு வீரர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.கடலுார் மாவட்ட பொறுப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.
20-May-2025