உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 550 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்திய ஊழியர்கள் சிக்கினர்

550 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்திய ஊழியர்கள் சிக்கினர்

விருத்தாசலம்,:விருத்தாசலம் அருகே 550 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கிய ரேஷன் கடை ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வாயிலாக பொது மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயை கடத்துவதாக, குற்ற நுண்ணறிவு தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மன்னம்பாடி கிராமத்தில் சோதனையிட்டனர்.அங்கு, முத்து என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள காட்டுக்கொட்டகையில், 550 லிட்டர் மண்ணெண்ணெய் நான்கு பேரல்களில் பதுக்கி வைத்தது தெரிந்தது. விசாரணையில், அகரம் ரேஷன் கடை விற்பனையாளர் வேப்பூர் அடுத்த திருப்பயர் செந்தில்குமார், 35, சாத்தியம் ரேஷன் கடை விற்பனையாளர் கணேசன், 30, ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரிந்தது. குடிமைப்பொருள் நுண்ணறிவு போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை