உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வேலைவாய்ப்பு முகாம் 

 வேலைவாய்ப்பு முகாம் 

கடலுார்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது. கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாத முகாம் வரும், 20ம் தேதி கடலுார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்க உள்ளது. இதில், 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளன. இந்த முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை