உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலமுருகன் கோவிலில் சத்துரு சம்ஹார யாகம்

பாலமுருகன் கோவிலில் சத்துரு சம்ஹார யாகம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், சத்துரு சம்ஹார யாகம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு சத்துரு சம்ஹார யாகம் நடந்தது. அதையொட்டி நேற்றுகாலை 10.00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, கோ பூஜை நடந்தது. 11.00 மணிக்கு சத்துரு சம்ஹார திரிசதி அர்ச்சனை, சுதர்சன பூஜை, புத்திர காமகோடி பூஜை, 12.00 மணிக்கு காயத்ரி மூல மந்திரம், பழங்கள், பட்சணங்கள், பட்டு வஸ்திர ஹோமம் நடந்தது. பிற்பகல் 2.00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை, 2:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ