சுற்றுச்சூழல் விழிப்புணர்வு; மாணவர்களுக்கு போட்டி
விருத்தாசலம்; விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் வினோத்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.அதில், காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள், தடுப்பு முறைகள் குறித்து ஓவியம், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடந்தது. கல்வி மாவட்டத்தை சேர்ந்த 100 பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.இ.ஓ., துரைபாண்டியன், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் பொறியாளர் அரவிந்த்ராஜ், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில், மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.