உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மருத்துவமனையில் சமத்துவ தீபாவளி

அரசு மருத்துவமனையில் சமத்துவ தீபாவளி

கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் சமத்துவ தீபாவளி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். ஏ.ஆர்.டி., மைய மருத்துவர் ஸ்ரீதர் வரவேற்றார். டி.எஸ்.பி., ரூபன்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மகப்பேறு டாக்டர் பரமேஸ்வரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், டாக்டர் பிரேமா, ஆர்த்தோ தலைமை டாக்டர் தம்பையா, குழந்தைகள் நல டாக்டர் அபிநயா ஜெயராமன், செவிலியர் கண்காணிப்பாளர் அனுசுயா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது. செவிலியர் கண்காணிப்பாளர் பிரேமலதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை