மாஜி படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் 30ம் தேதி ஏற்பாடு
கடலுார்; முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி மாலை 3:30 மணிக்கு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடக்கிறது.கூட்டத்தில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முப்படை பணியில் பணிபுரிபவர்களின் சார்ந்தோர் கோரிக்கையை மனுவாக இரு பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் வழங்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.