உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

புவனகிரி: சிதம்பரம் வக்கீல் குமஸ்தாக்கள் சங்க தேர்தலில் புவனகிரியை சேர்ந்த சிவக்குமார் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன் தினம், ஒருங்கிணைந்த நீதிமன்ற சங்க அலுவலகத்தில் தேர்தலில், அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். மாநில சங்க துணை தலைவர் வீரமோகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சேகர்,வெற்றிமணி, மணிகண்டன், பழனிவேல் தேர்தலை நடத்தி னர். இதில் தலைவராக சிவக்குமார், செயலாளராக சுந்தரமூர்த்தி, பொருளாளராக ரத்தினசாமி, துணைத் தலைவராக மணி மற்றும் துணை செயலாளராக சம்பத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி