மேலும் செய்திகள்
51 பேருக்கு கண் பரிசோதனை
15-Sep-2025
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த தொளார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரிமா சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமிற்கு, நல்லுார் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கினார். மருத்துவ அலு வலர் செல்லபெருமாள் முன்னிலை வகித்தார். முகாமில், கிட்ட பார்வை, துார பார்வை, கண்ணில் சதை வளர்தல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், விழித்திரை பாதிப்பு உட்பட கண் சம்பந்த நோய்களுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கப்பட்டது. கண்புரை பாதிப்பு கண்டறியப்பட்ட 22 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர், பகுதி சுகாதார செவிலியர், மருந்தாளுனர், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Sep-2025