கண் மருத்துவ முகாம்
மந்தாரக்குப்பம்; நெய்வேலி லிக்னைட் சிட்டி மற்றும் அன்பு ஊருணி அறக்கட்டளை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் பெரியாக்குறிச்சியில் நடந்தது.கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் பாலாஜி முன்னிலை வகித்தார். அன்பு ஊருணி அறக்கட்டளை தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். ஜோதி கண் மருத்துமனை டாக்டர்கள் துார பார்வை, கிட்ட பார்வை, கண் குறைபாடுகள் குறித்த நோய்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்து ஆலோசனைகளை வழங்கினர். அதை தொடர்ந்து அறக்கட்டளை சார்பில் பெரியாக்குறிச்சி புதுநகரில் ஆதரவற்ற முதியோருக்கு வீடு கட்டி கொடுத்து புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் கவின்நிலவன், நிர்வாகிகள் பவுல்ராஜ், ஜான், முத்தையா, மணிகண்டன், ராமலிங்கம், மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்