மேலும் செய்திகள்
ரத்த தான முகாம்
08-Aug-2025
கடலுார் : கடலுார் புருகீஸ்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், தி.மு.க., சார்பில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கிவைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, கடலுார் புருகீஸ்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது. முகாமை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், பொதுமக்களுக்கு கண் தொடர்பான நோய்களுக்கு, இலவச மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். கவுன்சிலர் அப்பு, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், கவுன்சிலர் விஜயகுமார், பிரகாசம், முன்னாள் வார்டுசெயலாளர் சீனிவாசன், கணபதி, சேகர், மாநகர தொழிற்சங்க துணை செயலாளர் அமர்நாத், பாலாஜி, அருள், கருணாநிதி, முன்னாள் கவுன்சிலர்முருகதாஸ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் மனோஜ்குமார், நெப்போலியன், கஸ்துாரி, கிராம முக்கியஸ்தர் திருநாவுக்கரசு, இளைஞரணி துணைஅமைப்பாளர் சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Aug-2025