உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

கடலுார் : கடலுார் வெண்புறா பொதுநல பேரவை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, பொதுநல பேரவை நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். தலைவர் சண்முகம் வரவேற்றார். நிர்வாகிகள் செந்தில், சீனுவாசன், பிரபாகரன் அலெக்ஸாண்டர் முன்னிலை வகித்தனர்.மூத்த வழக்கறிஞர் அருணாச்சலம், முன்னாள் ரோட்டரி கவர்னர் ஜெயச்சந்திரன், கார்மேகவண்ணன் சிறப்புரையாற்றினர். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.அப்போது, சமரச சுத்த சன்மார்க்க சங்க ராஜவேலு, பா.ஜ., ஆன்மிக பிரிவு மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன், அரிமா சங்க முன்னாள் தலைவர் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை