உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கோஷ்டி மோதல்: 2 பேர் கைது

 கோஷ்டி மோதல்: 2 பேர் கைது

கிள்ளை: கிள்ளையில், இரு கோஷ்டிகள் மோதிக்கொண்டதில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிள்ளை பூராசாமி மண்டப தெருவை சேர்ந்தவர் சிவா, 24; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரஹ்மானுக்கும், முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சிவா படுகாயமடைந்து, சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, சிவக்குமார், 48; ரஹ்மான், 25; ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தினேஷ், ராஜேஷ், சிவா, தினேஷ் ஆகிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை